/* */

பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஒருங்கிணைப்பு கூட்டம்

பாபநாசம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கிராம ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பாபநாசம் வட்டாரத்தில்  வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஒருங்கிணைப்பு கூட்டம்
X

பாபநாசத்தில்  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டம் பற்றிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 ம் ஆண்டு 6 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமும் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பண்டாரவாடை, பெருமாள் கோவில், சோமேஷ்வரபுரம், பசுபதிகோவில் திருவைகாவூர், கூனஞ்சேரி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து துறை ( வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வளத்துறை, மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலையம் காட்டுத்தோட்டம், கால்நடை துறை) அலுவலர்கள் கலந்து கொண்டு அவரவர் துறையின் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும் பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர் அரிவாள் உள்ளிட்ட தொகுப்பு, தென்னை கன்று, ஜிங் சல்பேட் மற்றும் ஜிப்சம் பனை விதை போன்ற இடுபொருட்கள் மானியத்தில் வேளாண் கிடங்குகளில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் பயிர் கடன் தேவை விபரங்கள், உழவர் கடன் அட்டை, மண் சேகரித்தல் முறை பற்றியும் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 May 2022 9:45 AM GMT

Related News