/* */

கும்பகோணம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி

கும்பகோணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, கல்லூரி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

கும்பகோணம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி
X

சதீஷ்குமார்

அரியலூா் மாவட்டம், தேவமங்கலங்கத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் சதீஷ்குமார் (19). கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பிஎஸ்சி சுற்றுலாத்துறை மூன்றாமாண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து கும்பகோணத்தில் இருந்து தேவமங்கலத்துக்கு செல்வதற்க்காக, ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பஸ்ஸில் படியில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது பஸ், கும்பகோணம் 60 அடி சாலை திருப்பதில் சென்ற போது, படியிலிருந்த சதீஷ்குமாரின் புத்தக பை, சாலையின் ஓரத்திலிருந்த கம்பியில் சிக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனையறிந்த கல்லூரி மாணவர்கள், சதீஷ்குமார் உயிரழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு போலீசார், டிஎஸ்பி அசோகன் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரையும் கைது செய்தவதாக உறுதியளித்தனர். இதனால், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 2 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?