/* */

கும்பகோணத்தில் மதுபானக் கூடமான பழைய மீன் மார்க்கெட்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!

கும்பகோணத்தில், மதுபானக் கூடமாக மாறிய பழைய மீன்மார்க்கெட் மாறியதால் பொதுமக்கள் பெரும் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மதுபானக் கூடமான பழைய மீன் மார்க்கெட்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!
X

கும்பகோணம் அருகே மதுபானக் கூடமாக மாறிய பழைய மீன் மார்க்கெட்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே பிடாரிக்குளம் எதிரே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை, கும்பகோணம் 60 அடி சாலை, தஞ்சை மெயின் சாலை ஆகிய 3 சாலைகளின் சந்திப்பு பகுதியில் இந்த மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த பழைய மீன் மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய மீன் மார்க்கெட் உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதாக கூறி, மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்தனர்.

தற்போது கொட்டகையில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதாக கூறி காலி செய்யப்பட்ட பழைய மீன்மார்க்கெட் எந்த பயன்பாடும் இல்லாமல் அப்படியே காலியாக கிடக்கிறது. இதனால் கட்டிடங்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மேலும், சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்களின் புகலிடமாகவும், மதுபானக்கூடமாகவும் மாறி வருகிறது.

இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், மது பாட்டில்களை வாங்கி வந்து பழைய மீன் மார்க்கெட்டில் அமர்ந்து அருந்துகின்றனர். மேலும் பழைய மீன்மார்க்கெட்டின் இருவாயில்களும் எப்போதும் திறந்து கிடப்பதால் மர்ம நபர்கள் எளிதாக மீன் மார்க்கெட்டிற்குள் செல்ல முடிகிறது. இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த கட்டிடத்தில் உள்ள இரும்பு கம்பிகளையும் மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.

கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் தான் பழைய மீன்மார்க்கெட் உள்ளது. இந்த இடத்தில் வணிக வளாகம் ஏதாவது கட்டி வாடகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை ஏதாவது வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டு வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Updated On: 12 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி