/* */

ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி சுவாமி கோயிலில் தங்கத் தேரோட்டம்

புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி சுவாமி கோயிலில் தங்கத் தேரோட்டம்
X

கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேரோட்டம்

தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும், இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நெய்வேத்யம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில், ஆண்டு தோறும் புரட்டாசி பெருவிழா 10 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல நிகழாண்டும் கொரோனா பெரும் தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனத்தில் பிரகார வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க நடைபெற்றது. திருத்தேரோட்டத்திற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் பக்தர்கள் இன்றி கோவில் பணியாளர்கள் வைத்து கோயில் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர் 10ம் நாளான (அக்-16) சனிக்கிழமை மூலவர் சந்நிதியில் திருமஞ்சனமும், நண்பகல் அன்னப்பெரும்படையலும், மாலை சப்தாவர்ணம், திருவீதி புறப்பாடு , நடைபெற்று விடையாற்றி திருவீதியுலாவுடன் நிகழாண்டின் புரட்டாசி பெருவிழா நிறைவு பெறுகிறது.

Updated On: 15 Oct 2021 5:00 AM GMT

Related News