/* */

கும்பகோணத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்: 4 வயது சிறுமி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

கும்பகோணத்தில், 4 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்: 4 வயது சிறுமி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
X

கும்பகோணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (42). இவர் நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கேசவ் (3) என்ற மகனும், கோபிகா (4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ராஜாவின் தங்கையின் வீட்டில் கோபிகாவை அவர்களது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர்.

அப்போது 4-வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் விளையாடி கொண்டிருந்த கோபிகா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி கோபிகா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், உருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Jun 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?