/* */

ஒருங்கிணைந்த பண்ணையத்திட்ட கால்நடைகள் காப்பீட்டு பணி

மதுக்கூர் வட்டாரம், ஒலயகுன்னம் மற்றும் புளியக்குடி கிராம 8 விவசாயிகளின் ஆடு மற்றும் கறவை மாடுகள் காப்பீடு செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த பண்ணையத்திட்ட கால்நடைகள் காப்பீட்டு பணி
X

காப்பீடு செய்யப்பட்ட  கால்நடைகள்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடு மற்றும் கறவை மாடுகளுக்கான காப்பீட்டுப் பணி நடைபெற்றது.

மதுக்கூர் வட்டாரம், ஒலயகுன்னம் மற்றும் புளியக்குடி கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட 8 விவசாயிகளின் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் முத்துப்பேட்டை சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி, துணை வேளாண் அலுவலர் அன்புமணி ஆகியோர் ஆய்வு செய்தனர். வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ், தினேஷ் பூமிநாதன் மற்றும் கார்த்தி ஆகியோர் தத்தம் தொகுதிக்கு உட்பட்ட கிராம விவசாயிகளின் கறவை மாடு மற்றும் ஆடுகளை காப்பீடு செய்வதற்கான பணிகளை ஒருங்கிணைத்தனர்.

கால்நடைத்துறை மருத்துவர்கள் ரூபவாஹினி கார்த்திகேயன், சங்கர் மற்றும் இளவரசி ஆகியோர் கறவை மாடு மற்றும் ஆடுகளின் வயது மற்றும் அடையாளங்களை ஆய்வு செய்து காப்பீட்டு பணியினை மேற்கொண்டனர். சிசி திட்ட பணியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பவித்ரா ஆகியோர் உடன் இருந்தனர். சந்தையில் ஆடு,மாடு கொள்முதலுக்கான பணிகளை சந்தை மேலாளர் மார்க்கஸ் ஒருங்கிணைத்தார்.

Updated On: 10 Feb 2022 7:29 AM GMT

Related News