/* */

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர்  திடீர் ஆய்வு
X

மதுக்கூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் குறுவைசாகுபடி மேம்பாட்டுக்கு  தேவையான விதைகள் நெல் நுண்ணூட்டம் மற்றும் திரவ உயிர் உரங்கள் இருப்பு பற்றி வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான்கள் குறித்து அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் மூலம் விக்ரமம் கிராமத்தில் வழங்கப்பட்ட கை தெளிப்பான்கள் மற்றும் தென்னங் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளமை குறித்து நேரடியாக பயனாளிகளிடம் கள ஆய்வு செய்தார். விக்ரமம் கிராமத்தில் லட்சுமணன், காளிமுத்து, காசிநாதன் போன்ற விவசாயிகளிடம் கைத் தெளிப்பான் வழங்கப்பட்டுள்ள விபரம் குறித்தும் முனீஸ்வரி வயலில் தென்னங் கன்றுகள் நடவு செய்துள்ளது பற்றியும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

கள ஆய்வின்போது விக்ரமம் பணித்தள பொறுப்பாளர் நிரோஜா உடனிருந்தார். மேலும் அத்திவெட்டி கிராமத்திலும் கலைஞர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங் கன்றுகள் நடவு செய்துள்ளதை மாரிமுத்து புஷ்பவள்ளி சாரதம் போன்ற விவசாயிகளின் வயலில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

அத்திவெட்டி பஞ்சாயத்து ஆய்வின்போது வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் உடனிருந்தார். கலைஞர் திட்ட பஞ்சாயத்துகளில் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அனைத்து வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி திட்ட செயல்பாட்டில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்து இருப்பில் உள்ள விதை நெல்லினை முளைப்பு திறன் பரிசோதனை மேற்கொண்டு உள்ளதா என்பது குறித்தும் உதவி விதை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 18 Jun 2022 11:50 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...