/* */

Thanjavur History in Tamil-ஊரும் பேரும் -தெரிந்த ஊர் தெரியாத வரலாறு-தஞ்சாவூர்

Thanjavur History in Tamil-தஞ்சாவூர் என்றதும் நினைவிற்கு வரக்கூடியது பெரிய கோவில்தான். இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் 'பெருவுடையார் கோவில்' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது.

HIGHLIGHTS

Thanjavur History in Tamil-ஊரும் பேரும் -தெரிந்த ஊர் தெரியாத வரலாறு-தஞ்சாவூர்
X

தஞ்சாவூர் 

தஞ்சாறை (ஆறை - அரண்) தஞ்சம் அடைந்தவர்களுக்கு அரணாக விளங்குவது என்னும் பொருளில் அமைந்துள்ளது.

Thanjavur History in Tamil-தஞ்சாவூர் என்றதும் நினைவிற்கு வரக்கூடியது பெரிய கோவில்தான். இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் 'பெருவுடையார் கோவில்' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. தஞ்சைக் கோவிலின் விமானம்தான் தென்னிந்தியாவிலேயே உயரமானது. ஏறத்தாழ 190 அடி கோவிலின் மேல்தளம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்டது. இங்குள்ள லிங்கமும் பெரியது; நந்தியும் பெரியது.


தமிழகத்தில் வேறெங்கும் இவ்வளவு பெரிய அளவு சிற்பங்கள் கிடையாது. ஒரே கல்லாலானவை இவை. கருவறைக் கோபுர நிலைகளின் உள்ளே ஆடவல்லான் ஆடிய 108 கரணங்களில் 81 மட்டும் செதுக்கப்பட்டுள்ளது. மற்றவை செதுக்க இடம் விடப்பட்டுள்ளது. இதன் சுற்றுச் சுவர்களில் 10-ஆம் நூற்றாண்டு சோழர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. சோழர் காலத்திற்கு பின்னர் நாயக்கர் காலத்தில் பிள்ளையார், முருகன் கோவில், அம்பாளுக்கான தனிக் கோவில், நந்தி மண்டபம் முதலியவை கட்டப்பட்டன. கோவிலே கோட்டை போல காணப்படுகிறது. கோவிலைச் சுற்றி அகழி இருக்கிறது. அகழிக்கு கல்லணையிலிருந்து தண்ணீர் வருகிறது.

தஞ்சை மாவட்டம் பிற்கால சோழ மண்டலத்தின் முக்கியப் பகுதியாக விளங்கியது. காவிரியால் வளம் கொழிப்பதால் இதைப் பாடாத இலக்கியங்களே இல்லை என்று எண்ணும் அளவிற்கு புகழ் பெற்றது. தமிழகத்தின் ஒரே பேரரசான சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திகழ்ந்தது. பல்லவர்களின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் தஞ்சையை ஓர் நகராக்கி ஆண்டவர்கள் முத்திரையர்களே ஆவர்.

பிற்கால சோழராட்சியைத் தொடங்கி வைத்த விஜயலாய சோழன் முத்திரையர்களை வென்று தஞ்சையை தலைமையிட மாக்கியபின் கிட்டத்தட்ட சோழராட்சி 429 வருடங்கள் இருந்ததை யாரும் மறக்க முடியாது. சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், பின்னர் செல்லப்ப நாயக்கர், சேவப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகியோரால் ஆளப்பட்டது; 1675 இல் மராட்டியர் கையில் விழுந்தது. சரபோஜி காலத்தில் வெள்ளையர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.

தஞ்சாவூர் மாவட்ட வரலாறு !!!! 1700 களில் டெல்டா பகுதியான தஞ்சாவூர் நாட்டை மராட்டியர்கள் ஆண்டு கொண்டு இருந்த காலம் , 1740 ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கு கிழக்கு இந்திய கம்பெனி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அப்பொழுது அவர்களுடன் இணக்கமாக மராட்டியர்கள் இருந்ததால் , மராட்டியர் ஆளுகைக்கு உட்பட்ட தஞ்சாவூர் நாடு முழுவதும் ஆங்கிலேயர் வசம் சென்ற போதும் தஞ்சை தலைநகரை மட்டும் ஆங்கிலேயர்கள் மராட்டிய மன்னர் இரண்டாம் சிவாஜியின் வசமே வழங்கி இருந்தனர்.

தஞ்சை மாநகரை தவிர்த்து பிற பகுதிகளை இணைந்து தாஞ்சூர் ஜில்லா உருவாக்கினார்கள் 1799 ஆம் ஆண்டு , மாவட்ட தலைநகராக நாகப்பட்டினத்தை அறிவித்தார்கள், தஞ்சை மாவட்ட முதல் ரெசிடென்ட் ஆக சார்லஸ் ஹாரிஸ் நியமிக்கப்பட்டார்.


தஞ்சை மாவட்டம் கீழ தஞ்சை மேல தஞ்சை என்று பிரிக்கப்பட்டு 1806 ஆம் ஆண்டு மாவட்ட நீதி மன்றம் தொடங்கப்பட்டது . கீழ தஞ்சையின் மாவட்ட நீதி மன்றம் தரங்கம்பாடியிலும் , மேல தஞ்சையின் நீதி மன்றம் குடந்தையிலும் அமைந்தது. மேல தஞ்சையின் மாவட்ட நீதிபதியாக சார்லஸ் உட் குக் நியமிக்கப்பட்டார். இதில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ரெசிடென்ட் அவர்களின் வசமே இருக்கும் மாவட்ட நீதிபதியின் ஆளுகைக்கு கீழ் இல்லை . அதற்கு 1799 முதல் செயல்பட்ட ரெசிடென்ட் லிஸ்டையும் மாவட்ட நீதிபதி லீஸ்டையும் பார்த்தாலே புரியும்.


தாஞ்சூர் (தஞ்சாவூர்) ஜில்லாவின் தலைநகராக நாகபட்டினம் 1799 முதல் 1845 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. பின்னர் மாவட்ட தலைநகரம் தரங்கம்பாடிக்கு மாற்றினார்கள், தரங்கம்பாடி 1845 முதல் 1860 ஆம் ஆண்டு வரை தஞ்சை ஜில்லாவின் தலைநகராக செயல்பட்டது. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது குடந்தை தலைநகராக இருந்ததாக சொல்லும் செய்தி உண்மை இல்லை தஞ்சாவூர் ஜில்லாவின் மேல தஞ்சை நீதி மன்றம் மட்டுமே செய்யப்பட்டது தலைநகரம் செயல்படவில்லை.

1855 ஆம் ஆண்டு இரண்டாம் சிவாஜி மன்னர் இறந்து போனார், அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தஞ்சை மாநகரையும் Doctrine of lapse என்ற அவர்களின் கொள்கை அடிப்படையில் தம் வசப்படுத்தி கொண்டது. பின்னர் ஒட்டுமொத்த தாஞ்சூர் ( தஞ்சாவூர் ) நாடும் கிழக்கு இந்திய கம்பனி வசம் சென்றது.

தலைநகரம் தஞ்சை தங்கள் வசம் வந்த உடனே 1860 ஆண்டு தாஞ்சூர் மாவட்டத்திற்கு தஞ்சை தலைநகரமாக மாற்றப்பட்டு அனைத்து அரசு துறை அலுவலகமும் தஞ்சைக்கு மாற்றப்படுகிறது. அதுவரை மாவட்ட நிர்வாகம் ரெசிடென்ட் தலைமையில் இயங்கியதை மாற்றி , மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும் படி மாற்றப்படுகிறது..

1806 ஆம் ஆண்டு முதல் குடந்தை மற்றும் தரங்கம்படியில் இயங்கிய மாவட்ட நீதிமன்றம் 1860 ஆம் ஆண்டு தஞ்சைக்கு மாற்றப்பட்டது .இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒட்டு மொத்த டெல்டாவும் தஞ்சாவூர் நாடு ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததால், ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பொழுது தாஞ்சூர் ஜில்லா என்று உருவாக்கினார்கள், தஞ்சாவூர் நாட்டின் தலைநகரம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் மராட்டியர் வசமே இருந்தது பின்னாளில் தான் கிழக்கு இந்திய கம்பனி வசம் சென்றது, ஆகவே தான் தாஞ்சூர் ஜில்லா உருவாக்கப்பட்ட போது தஞ்சாவூர் மாநகரம் தலைநகராக இல்லை .


இது தான் தஞ்சை ஜில்லாவின் வரலாறு இதற்கான ஆதாரங்கள் Tanjore gazzater, மற்றும் தஞ்சை மற்றும் நாகை மாவட்ட இணைய தளத்திலும், தஞ்சை மாவட்ட நீதி மன்ற இணைய தளத்திலும் உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 March 2024 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!