/* */

தொடரும் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடரும் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம், கடையம், செங்கோட்டை, கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதலே சாரல் மழை பெய்து வந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேரருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். விரைவில் குற்றால அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 July 2021 2:33 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?