மேலப்பாவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்: போலீஸ் குவிப்பு
பேனர் அகற்றியதை கண்டித்து மேலப்பாவூரில் இருந்து சுந்தரபாண்டியபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS

மேலப்பாவூர் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றதை தொடர்ந்து பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரை படத்தில் காணலாம்.
தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்திய பட்ட ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 22, 23, 24 தேதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வைத்திருந்த ஒரு சமூகத்தினர் பிளக்ஸ் பேனர் ஒன்றை கோவிலின் அருகே வைத்திருந்தனர் .
நேற்று இரவில் மர்ம நபர்கள் சிலர் அந்த பேனரை அகற்றி உள்ளனர். இன்று காலையில் பேனரை இல்லாததை கண்ட அச்சமுகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த இடத்தில் பேனரை வைக்க வேண்டும் பேனரை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு பேனர் அகற்றியதை கண்டித்து மேலப்பாவூரில் இருந்து சுந்தரபாண்டியபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணி நேரம் சாலை ஈடுபட்ட கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால் மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.