/* */

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பழங்குடியினர் தரிசனம்

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்

HIGHLIGHTS

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பழங்குடியினர் தரிசனம்
X

கோட்டூர் பழங்குடி மக்கள் தங்கள் மரபுப்படி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பல்வேறு அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. தமிழகத்தில் குமரியில் ஆரம்பித்து மகாராஷ்டிரா வரை நீண்டிருக்கும் இந்த மலைத்தொடர் பல்லுயிர் காடுகளாகும். இங்கு ஏராளமான மூலிகை வனங்கள் உள்ளது.

அதேபோல் புலி, சிங்கம், கரடி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணப்படும் ராஜநாகம், சிங்கவால் குரங்கு, சாம்பல் நிற அணில், என பல்வேறு சரணாலயங்கள் அமைந்துள்ளது. அதேபோல் ஏராளமான பழங்குடியினரும் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்குவதில்லை. சில இடங்களில் வனத்துறையினர் கட்டாயப்படுத்தி அவர்களது குடியிருப்பு பகுதிகளை மாற்றி வருகின்றனர். அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் அமைந்திருக்கும் அகஸ்தியர் கோவிலுக்கு செல்ல தமிழக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கேரள அரசு அகஸ்தியர் கூடம் வழியாக பழங்குடியினருக்கு வருவாய் ஈட்டும் வகையில் அவர்களை வழிகாட்டியாக நியமித்து செயல்படுத்து வருகிறது.

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை தவறாமல் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் நேற்று சபரிமலை சந்நிதிக்கு வந்தனர். அவர்களில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை தரிசிக்க மட்டுமே காட்டிலிருந்து செல்கின்றனர். மற்ற எந்த காரியத்திற்காகவும் காட்டை விட்டு வெளியே வருவதில்லை.கோவிட் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சபரிமலைப் பயணம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. இம்முறை 20 பேர் கொண்ட குழுவினர் தரிசனம் செய்தனர்.

மரபுப்படி, மூங்கில் குச்சிகளில் நிரம்பிய காட்டுத் தேன், காட்டில் விளையும் கதலிக்குழம்பு, கரும்பு, காட்டு குந்திரிக், பூக்கூடை, மூங்கில், கரும்பு, நாணல் ஆகியவற்றால் விரத தூய்மையுடன் நெய்யப்பட்ட பெட்டிகளுடன் கனி குழுவினர் வந்து சந்நிதானத்தில் காணிக்கையாக செலுத்தினர். திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோட்டூர் முண்டானி மாடன் தம்புரான் கோயிலில் இருந்து புறப்பட்ட குழுவினர், கொட்டாரக்கரை கணபதி கோயில், பந்தளம் அரண்மனை ஆகிய இடங்களில் தரிசனம் செய்துவிட்டு இரவு சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 16-ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார நாள்களிலும், அதைக் காட்டிலும் வார இறுதிகளிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சபரிமலை கோயில் திறக்கப்பட்ட முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி 47,947 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். முதல் 6 நாள்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தற்போது வரை சபரிமலையில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 Dec 2022 6:45 AM GMT

Related News