/* */

முதல்வர் வருகையையொட்டி தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

முதல்வர் வருகையையொட்டி தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முதல்வர் வருகையையொட்டி தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
X

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்.

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்து தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் இன்று காலை பொதிகை ரயில் மூலம் தென்காசி வந்தடைகிறார். பின்னர் ரயில் நிலையத்திலிருந்து குற்றாலம் அரசு விருதுநகர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து விழா நடைபெறும் கணக்கப்பிள்ளை வலசை சென்றடைகிறார். இதனை தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பிற்காக சாலை மார்க்கமாக செல்லும்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 07.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை குற்றாலம் வழியாக தென்காசி செல்லும் வாகனங்கள் இராமாலயம், காசிமேஜர்புரம், இலஞ்சி, KK வலசை வழியாக செல்ல வேண்டும்.

காலை 07.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை கடையநல்லூர் செல்லும் வாகனங்கள் செங்கோட்டை, பண்பொழி,வடகரை, அச்சன்புதூர் வழியாக செல்ல வேண்டும்.

காலை 07.30 மணி முதல் முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை மதுரை சாலையில் செங்கோட்டை வரும் வாகனங்கள் கடையநல்லூர் பண்பொழி வழியாக செல்ல வேண்டும்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை இடைகால் விளக்கு வழியாக வருபவர்கள் வேலாயுதபுரம், சாம்பவர் வடகரை, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம்பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை மங்களாபுரம் வழியாக வருபவர்கள் அச்சன்பட்டி, வேலாயுதபுரம், சாம்பவர்வடகரை, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை சிங்கிலிபட்டி வழியாக வருபவர்கள் பாம்பு கோவில் சந்தை,வீரசிகாமணி, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம்பாறை பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை வாசுதேவநல்லூர் வழியாக வருபவர்கள் நெற்கட்டும்செவல், தலைவன் கோட்டை, சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை உள்ளார் வழியாக வருபவர்கள் இராயகிரி, KV நல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம் சத்திரம், ஆசாத் நகர், மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை சிவகிரி PS வழியாக வருபவர்கள் தென்மலை,KV நல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம் சத்திரம், ஆசாத் நகர், மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை சொக்கநாம் புதூர் வழியாக வருபவர்கள் தென்மலை, KV நல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம் சத்திரம், ஆசாத் நகர், மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம் என்ன தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On: 9 Dec 2022 4:02 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!