/* */

குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
X

குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி குழல்வாய்மொழியம்மை திருக்கோவிலில் ஐப்பசி விஷு திருவிழா, சித்திரை விஷு திருவிழா, திருக்கல்யாணத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும். அதைப்போல் திருவாதிரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா மொத்தம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் கோவில் எதிரே உள்ள கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது. 18 -ஆம் தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 20 -ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு குற்றால நாதர் ஆலயத்தில் உள்ள திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

Updated On: 11 Dec 2021 3:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  3. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  5. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  9. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  10. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?