/* */

தென்காசி: சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Youth Congress protest சீமானை கண்டித்து தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

Youth Congress protest
X

தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். 

ராஜீவ் காந்தி குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலையான சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம், தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் பாலியல் குற்றவாளி ராஜீவ் காந்தியென விமர்சித்து பேசியிருந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Youth Congress protest அந்த அடிப்படையில் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு இளைஞரணி காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் இளவரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரண்டை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன், மாநிலச் செயலாளர் சுப்பையா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சந்தோஷ், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கை கணேசன், கதிரவன், நகர தலைவர் பால்ராஜ், ஜெயபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், வட்டாரத் தலைவர் பெருமாள், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரபீக் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...