/* */

கொரோனா பரவல்: தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக - கேரளா எல்லையில், தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கொரோனா பரவல்: தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு
X

தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடிபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் எஸ்.பி.பேசியதாவது: சபரிமலையில் மண்டல பூஜை காரணமாக ஏராளமான வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்தது. தற்போது அந்த வாகன போக்குவரத்து பிரிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் காவல்துறை சோதனை சாவடியிலும், பிற வாகனங்கள் கொரோனோ கண்காணிப்பு சோதனை சாவடிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில், இரண்டு எல்லைப் பகுதிகளில் இரண்டு சோதனைச் சாவடிகள் செயல்பட்டு வருகிறது.

இதில் ஒன்று, புளியரை மற்றொன்று மேக்கரை சோதனைச்சாவடி. இந்த சோதனைச்சாவடி மூன்று மாதங்களாகக் மூடப்பட்டு வந்த வந்த நிலையில் கேரள மாநில அரசின் வேண்டுகோளையேற்று தற்போது சபரிமலை சீசன் காலத்திற்காக திறக்கப்பட்டது. மேக்கரை பகுதியில் கொரோனோ கண்காணிப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள்,சோதனைச்சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை, முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் 15ஆம் தேதி முதல் தொடங்கி, சோதனைகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 250 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடி அபராதமாக 35 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கபட்டது. விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 2450 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முக்கிய நுழைவு பகுதிகளில் இருபத்தி ஐந்து சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 17 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!