/* */

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் 1982-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி கொலைமுயற்சி,கொள்ளை போன்ற வழக்கின் குற்றவாளியான சுபாஷ்கண்ணன் (24), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான ரகு (37) மற்றும் ஆலங்குளம் காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான ராசு @ செல்வராஜ்(34) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி ஐந்து நபர்களும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்பிக்கப்பட்டது.

குண்டர் தடுப்புச்சட்டம் ஓர் மீள் பார்வை ...

குண்டர் சட்டம் என்பதன் முழுமையானப் பெயர், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், திருட்டு வீடியோ குற்றவாளிகள், திருட்டுத்தனமாக திரைப்படங்களை சி.டி-க்களில் பதிவு செய்யும் குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்' என்பது ஆகும்.

இந்த சட்டம் 1982-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் இந்தசட்டம் கொண்டு வரப்பட்டது. அதிகாரிகள் இந்த சட்டத்தின் மூலம் ஒருவரை சிறையில் தள்ள முடியும். கிராமப்புற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களும் நகர்ப்புறப் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இந்த சட்டத்தை செயல்படுத்த முடியும். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16,17, 22 மற்றும் 45 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்கள் எதையாவது செய்யக் கூடியவர் அல்லது குற்றங்களை செய்யும் குழுவின் உறுப்பினர்களாக இருப்பவர் என்று கருதினாலே அவர்களை குண்டர்கள் என்று வரையறை செய்கின்றனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோர் கொண்ட குழு முடிவு செய்யும். குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால் அந்த நபரை சுமார் 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவர முடியாது. அதுமட்டுமல்ல இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர்கள் நிபந்தனைகளை மீறினால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம்.

மாநில அரசு விரும்பினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்கலாம். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிமன்ற விசாரணைகள் எதுவும் கிடையாது. இதனால், கைது செய்யப்பட்டவர் தன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவையே அணுக முடியும். இவர்களால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள் மீது இந்த குண்டர் சட்டம் அதிக அளவில் போடப்படுகிறது.

Updated On: 1 Feb 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  2. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  3. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு