தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி தேர்வு

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த ஓட்டெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழ்செல்வி வெற்றி.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி தேர்வு
X

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்செல்வி.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை காங்கிரசும், ஒரு வார்டை ம.தி.மு.க.வும் கைப்பற்றி இருந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி, 6-வது வார்டு உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடையே போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது தலைவர் பதவிக்கு தமிழ்செல்வி, கனிமொழி ஆகிய இருவருமே மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில் தமிழ்செல்விக்கு 8 பேர் ஆதரவு தெரிவித்தனர். கனிமொழிக்கு 5 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவை பெற்ற தமிழ்செல்வி தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு சக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

Updated On: 23 Oct 2021 1:54 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  நம்பியூர்: கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை
 2. பாளையங்கோட்டை
  உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்...
 3. அரியலூர்
  அரியலூரில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க...
 4. மதுரை மாநகர்
  மழையால் குளம் போல் மாறிய சாலைகள்- மதுரை மாநகராட்சி கவனிக்குமா?
 5. இந்தியா
  இன்று புல்வாமா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
 6. இந்தியா
  விமான நிலையங்களில், புதிய ஓமிக்ரான் பயண விதிகள்: தனிமைப்படுத்தல்...
 7. மேட்டூர்
  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,000 கன அடியாக குறைவு
 8. ஈரோடு
  பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர்...
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள்