/* */

குற்றாலத்தில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன பேரீச்சம்பழங்கள் பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன பேரீச்சம்பழங்கள் பறிமுதல்
X

பேரீச்சம்பழம் பைல் படம்.

குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற பேரீச்சம் பழத்தை கைப்பற்றினார்கள்.

தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தென்னகத்தின் ஸ்பா, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு குற்றால அருவி தான் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம், குளிக்க அனுமதி இல்லாத வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகா தேவி அருவி, தேனருவி என ஏராளமான அருவிகள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய பருவநிலை காலங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இங்கு வீசும் இதமான சாரல் மழையும், தென்றல் காற்றையும் அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்குள்ள அருவிகளில் நீராடி குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதரை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இதுபோன்று சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் தேவைகளுக்கு குற்றாலம் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ள மக்கள் இங்கு கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றாலத்தை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

தற்போது ஐயப்ப சீசன் நடைபெறுவதால் குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இங்கு உள்ள கடைகளில் வீட்டுக்கு தேவையான தின் பண்டங்களை வாங்கிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் அந்த உணவு பொருட்கள் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தரமற்ற கெட்டுப்போன துர்நாற்றம் வீசிய பேரீச்சம் பழங்கள் குற்றாலத்தில் விற்பனை செய்வதை தடுத்து கண்டறியப்பட்டுள்ளது. குற்றாலம் வடக்கு சன்னதி பஜார் ரதவீதி பகுதிகளில் தரமற்ற முறையில் பேரீச்சம் பழங்கள் மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு செய்ததன் அடிப்படையில் பரிசோதனைக்காக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை அந்த கடையின் உரிமையாளர் பாதுகாப்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொருட்கள் எல்லாம் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவு வந்த பின்னர் கையகப்படுத்த பட்ட பேரிச்சம்பழங்கள் எல்லாம் குப்பையில் கொட்டப்படும். அதுவரை அந்தந்த கடை உரிமையாளர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருக்கும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Nov 2022 6:00 AM GMT

Related News