ஊரக உள்ளாட்சி தேர்தல்: அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகம்

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகம்
X

தமிழகத்தில் நேற்று 9 மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்திற்கு அக்டோபர் 6ஆம் தேதி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் 9ஆம் தேதி தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பாதுகாப்பு பணிகள், பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பத்திரிக்கை செய்திகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக மக்கள் தொடர்பு அலுவலம் தொடர்பு கொண்டபோது தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற குழப்பத்தில் பொது மக்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் போது கூட செய்தியாளர்களுக்கு அழைப்பில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லாததால் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Updated On: 14 Sep 2021 10:39 AM GMT

Related News