குற்றாலத்தில் பிடிபட்ட அரிய வகை வெள்ளை ராஜநாகம்: பொதுமக்கள் அதிர்ச்சி

குற்றாலம் மெயின் அருவி அருகே கொடிய விஷமுள்ள அரிய வகை வெள்ளை இன 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றாலத்தில் பிடிபட்ட அரிய வகை வெள்ளை ராஜநாகம்: பொதுமக்கள் அதிர்ச்சி
X

குற்றாலத்தில் அரிய வகை வெள்ளை இன ராஜநாகத்தை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோவிலானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியின் மிக அருகாமையில் உள்ள இந்த குற்றாலநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குற்றால அருவியில் குளித்துவிட்டு குற்றாலநாதர் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில், குற்றாலநாதர் கோயில் அலுவலக வளாகத்தில் மிகப்பெரிய பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பக்தர்கள் சிலர் பார்த்து கோயில் ஊழியர்களிடம் தெரிவிக்கவே, உடனே கோயில் ஊழியர்கள் குற்றாலம் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின், அடிப்படையில் விரைந்து வந்த குற்றாலம் வனத்துறையினர் மற்றும் தென்காசி தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி சுமார் 12 அடி நீளமுள்ள அரிய வகை கொடிய விஷம் பொருந்திய வெள்ளை இன ராஜநாகத்தை பிடித்தனர்.

தொடர்ந்து, பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அடர்வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட திட்டமிட்டுள்ள நிலையில், தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலநாதர் கோயில் வளாகத்தில் 12 அடி நீளமுள்ள அரியவகை ராஜநாகம் பிடிபட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 Sep 2023 11:09 AM GMT

Related News