/* */

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அறவழி போராட்டம்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அறவழி போராட்டம்
X

சுரண்டையில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசினார்.

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து மக்களவை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டையில் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவருமான பழனி நாடார் தலைமையில் அறவழி போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் மற்றும் காந்தி உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பாராளுமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பான கேள்விகளை கேட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வர உள்ளது. அதில் ராகுல் காந்தி போட்டியிடக் கூடாது என்ற எண்ணத்தோடு மத்தியில் ஆளும் பிஜேபி அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடும் பாஜக அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் தலைமையின் அனுமதி பெற்று நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியன், தென்காசி வட்டாரத் தலைவர் பெருமாள், நகரத் தலைவர்கள் ஜெயபால், மாடசாமி ஜோதிடர், சிங்க குட்டி, பேச்சாளர் எஸ் ஆர் பால்துரை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2023 4:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்