/* */

ஊராட்சி தலைவர்களாக கல்லூரி மாணவி உள்பட இளம் வயதினர் பதவியேற்பு

தென்காசி மாவட்டத்தில், 22 வயது கல்லூரி மாணவி, 21 வயது பட்டதாரி பெண் உள்பட, ஊராட்சி மன்ற தலைவர்களாக, 221 பேர் இன்று பொறுப்பேற்றனர்.

HIGHLIGHTS

ஊராட்சி தலைவர்களாக கல்லூரி மாணவி உள்பட இளம் வயதினர் பதவியேற்பு
X

வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், லெட்சுமியூர் பகுதியை சேர்ந்த பொறியியல் முதுகலை மாணவி சாருகலா வயது (22) பதவியேற்றார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 144 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 221 ஊராட்சி மன்ற தலைவர்கள்,1905 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 2284 நபர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

இதில் கடையம் ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் லெட்சுமியூர் பகுதியை சேர்ந்த பொறியியல் முதுகலை மாணவி சாருகலா வயது (22) நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். இவர் 3336 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்துவடிவை விட 796 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் இன்று, வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல் செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மேடு ஊராட்சி மன்ற தலைவராக அனு (21) பதவியேற்று கொண்டார். இவர், குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றவர்.

Updated On: 20 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!