/* */

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடிய பழனி நாடார் எம்.எல்.ஏ.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார் பழனி நாடார் எம்.எல்.ஏ.

HIGHLIGHTS

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடிய பழனி நாடார் எம்.எல்.ஏ.
X

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் பழனி நாடார் எம். எல்.ஏ. கலந்துரையாடினார்.

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனி நாடார் உள்ளார். இவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி சுரண்டை ஆலடிப் பட்டியில் உள்ள நிலா மனவளர்ச்சி குன்றிய இல்லத்திற்கு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பழனி நாடார் எம்.எல்.ஏ. சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் சாய்வு தளம் அமைத்துள்ளார். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என அழைத்த பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரையே சேரும்.மேலும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகள் மீது தீராத பற்று கொண்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளார் என பேசினார்.

மேலும் வருகின்ற எட்டாம் தேதி தமிழக முதல்வர் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அனைவருக்கும் சேர்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் பிரதிநிதிகள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், மற்றும் பழக உடன்பிறப்புகள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

நிகழ்ச்சியில் பிரியா அழகுசுந்தரம், நிர்வாகி பால கணேஷ்,சிறப்பு ஆசிரியர் மதுபாலா,அமுதா, பிரபாகரன், அரவிந்த் தெய்வேந்திரன்,ராஜ்குமார், செய்தி மாடசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?