/* */

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று விருது வழங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று
X

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (பைல் படம்).

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தேசிய தர சான்று பெறுவதற்கான முயற்சியை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் மேற்கொண்டார்.

மருத்துவமனையின் தரத்தினை உயர்த்துவதற்காக நோயாளிகளின் நலனுக்காக உயர் சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கும் தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்களை வாங்கி வழங்கினார் . மேலும் பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் மருத்துவமனையின் பல்வேறு கட்டிடங்களை புதுப்பித்து வர்ணம் பூசி புதுமையாக்கினார். அதில் தென்காசி மாவட்ட கொடையாளர்கள் பலரும் தென்காசி மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கு உதவி செய்தனர் .

இந்த வகையில் தென்காசி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் எம்.பி ,சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், ராஜா, பழனி நாடார், கிருஷ்ணமுரளி, இந்திய மருத்துவ சங்கம், பொன்ரா மருத்துவமனை, ஆவுடையானூர் தர்மராஜ் மருத்துவமனை, மீரான் மருத்துவமனை, சாந்தி மருத்துவமனை, ஏ.எல். எஸ் மருத்துவமனை ,சிவா மருத்துவமனை , அருணாச்சல செட்டியார் ,VTSR ,ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் என பலரும் மருத்துவமனை பராமரிப்பு பணிகளுக்கும்,மருத்துவமனை கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவதற்கும்,வளாகத்தில் மரம் செடிகள் நடுவதற்கும் பண உதவி மற்றும் பொருளுதவியும் செய்துள்ளனர்.

தெற்கு மாவட்டதி மு க செயலாளர் சிவ பத்மநாபன் வளாகப் பகுதி சுத்தப்படுத்துவதற்கான அனைத்துவசதிகளையும் செய்து கொடுத்து இருக்கிறார்.புதிய கட்டிடத்திற்கு முன்னால் கரடு முரடாக கிடந்த 100மீட்டர் பாதைக்கு டி. ஆர். எஸ். குழுவினர் தார் ரோடு போட்டு கொடுத்துள்ளனர்.

வளாகத்தில் மியாவாக்கி அடர் வனம் மற்றும் சுற்றுப்புறத்தில் மரம் செடி கொடிகள் நட்டு வளாகத்தை பசுஞ்சோலையாக மாற்றிய எக்ஸ்னோரா குழுவினர், பசுமை தென்காசி முஸ்தபா மற்றும் த வின்சென்ட் ஆசிரியர் குழுவினர் செய்துள்ளனர்.தென்காசி நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அவரது குழுவுடன் இணைத்து மருத்துவமனை வளாகத்தினை சுத்தம் செய்து கொடுத்ததும் உதவி செய்தனர் .

மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் அவர்களின் வழிகாட்டுதலுடன் தரச்சான்று பெறுவதற்கு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் , பயிற்சி மருத்துவர்கள் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் , செவிலியர்கள் , மருந்தாளுனர்கள் , நுண்கதிர் வீச்சு பணியாளர்கள் , ஆய்வக பணியாளர்கள் ,அலுவலக பணியாளர்கள் , ANM , ICTC பணியாளர்கள் , மருத்துவமனை பணியாளர்கள் , மருந்து கட்டும் பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்கள் , QPMS ஒப்பந்த பணியாளர்கள் , பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மின்சாரம் என அனைத்து துறை பணியாளர்களும் தங்களது முழு ஒத்துழைப்பும் கொடுத்து பொது மக்களின் நலன் காக்கவும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தேசிய தர சான்று பெற்று முதன்மையான மருத்துவமனையாக மாற்றிட மருத்துவமனை கண்காணிப்பாளருடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டனர் .

இந்த ஆய்வு 2022 ஜூலை மாதம் 13, 14 , 15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 03/10/2022 இணையதளம் வாயிலாக அறிவிக்கப்பட்டது .


இதில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனைத்து தரத்தினையும் பெற்ற சிறந்த மருத்துவமனைக்கான சான்றினை பெற்ற முதன்மை மருத்துவமனையாக தேசிய தர குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு ,வெளிநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு , பிரசவ அறை ,பிரசவ வார்டு , பிரசவ அறுவை அரங்கம் , குழந்தைகள் வார்டு ,பச்சிளங்குழந்தைகள் வார்டு , அறுவை அரங்கம் ,அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பகுதி ,தீவீர சிகிச்சை பிரிவு , உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு , இரத்த வங்கி ,ஆய்வகம் , எக்ஸ்ரே , ஸ்கேன் , மருந்தகம் ,மருத்துவ கழிவுகள் அகற்றும் முறை , நோயாளிகளுக்கு வழங்கும் உணவு , படுக்கை விரிப்புகள் , பிணவறை போன்ற அனைத்து 18 பிரிவுகளின் தரமும் சிறந்ததாக உள்ளதாக தேசிய தரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பான முறையில் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைத்து துறை பணியாளர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் .

மேலும் இத்தரத்தினை மேற்படுத்த உதவிய பொதுமக்களுக்கும் மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் நன்றியினை தெரிவித்தார் .

பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும் , மருத்துவமனையின் இத்தரத்தினை எப்போதுமே நிரந்தரமாக பேணிக்காப்பதற்கும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்குவதற்கும் பொதுமக்கள் இது போன்ற ஒத்துழைப்பு எப்போதும் வழங்குமாறு மருத்துவமனை பணியாளர்கள் சார்பாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டு அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார். .

Updated On: 5 Oct 2022 2:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  4. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  6. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  7. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  10. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!