/* */

கேரளமாநிலம் அம்பநாடு எஸ்டேட்டில் மண் சரிவு: தமிழர்கள் வசிக்கும் வீடுகள் சேதம்

அதிகாலையில் பணிக்காக அனைவரும் சென்ற சமயத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை

HIGHLIGHTS

கேரளமாநிலம் அம்பநாடு எஸ்டேட்டில்  மண் சரிவு:  தமிழர்கள் வசிக்கும் வீடுகள் சேதம்
X

கேரள மாநிலம் அம்பநாடு எஸ்டேட் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு.

கேரள மாநிலம் அம்பநாடு எஸ்டேட் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதே போல் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதியில் நேற்று கனமழை பெய்துள்ளது. இதனால் கடுமையான மண் சரிவு ஏற்பட்டது.

அந்த பகுதியில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கியிருந்து, தேயிலை தோட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பெய்த கன மழையில் தமிழர்கள் வசிக்கின்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதிகாலையில் பணிக்காக அனைவரும் கிளம்பிய சமயத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டதால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை. மேலும் அம்பநாடு - எஸ்டேட்டிற்க்கு செல்லக் கூடிய சாலைகள் மோசமான நிலையில் அங்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 11 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!