/* */

தென்காசி மாவட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விவசாயம் செய்ய படித்தஇளைஞர்கள் ஆர்வத்துடன் வருவது விவசாயம் மீதான நம்பிக்கையை விதைத்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூரில் தேனி வளர்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார் 

தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் குறித்தும், அரசு மானிய உதவியுடன் விவசாயம் செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வரும் விவசாயிகளின் வேளாண் உற்பத்தி முறைகள் குறித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, முதற்கட்டமாக சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள பனையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப் பட்டு , அதன் மையப்பகுதியில் அரசு செலவில் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு தேவையான சொட்டு நீர் பாசனங்களை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.அதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த தரிசு நிலத்தை சரி செய்து தற்போது அதில் செய்ய உள்ள விவசாய முறைகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை உதறிவிட்டு தற்போது தனது நிலத்தில் கோக் கோ மரக்கன்றுகளை அரசு மானியத்தில் வாங்கி கொக்கோ பழங்களை சாகுபடி செய்து தனியார் சாக்லேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கொக்கோ விதைகளை தனது பண்ணை வளாகத்தில் சுத்தம் செய்து விற்பனை செய்து வருவது குறித்து, மீண்டும் அதே தோட்டத்தில் தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் லாபத்தையும் தேனீ வளர்ப்பால் விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஊர்மேலழகியான் பகுதியில் உள்ள மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக தோட்டக் கலை துறை மூலம் தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 15 கோடிக்கு மேலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதில்,தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் சுமார் 238 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலிருந்து சுமார் 171 லட்சம் பணம் எடுக்கப்பட்டு 555 பயனாளிகள் பயனடைந்துள்ளதாகவும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 105 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 51 லட்சம் எடுக்கப்பட்டு 334 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 1,435 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 534 பயனாளிகளுக்கு 202 லட்சம் செலவில் நுண்ணுயிர் பாசன அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயம் செய்ய படித்த இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவது எதிர்காலத்துகான நம்பிக்கையை விதைத்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 29 March 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு