குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

குற்றாலம் அருகே புல்லுக்காட்டு வலசை பகுதியில், குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
X

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுக்காட்டு வலசை பகுதியில் ராஜேந்திரன் என்ற நபர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறை ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான காவலர்கள் இணைந்து, தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புல்லுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த சுடலை என்பவரின் மகன் ராஜேந்திரன் (60) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 37 ஆயிரம்மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், சாம்பவர் வடகரை காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.பி.புரம் பேருந்து நிலையம் அருகே, சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மத்தளம்பாறை பகுதியை சேர்ந்த, குத்தாலிங்கம் என்பவரின் மகன் பழனி (38) என்பவர் மீது, சார்பு ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து, கைது செய்தார். அவரிடம் இருந்து ரூபாய் 11 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 19 Sep 2021 5:00 AM GMT

Related News