கூடுதல் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி அருகே சடையப்பபுரம் பகுதியில் கூடுதல் வகுப்பறை கேட்டு கோரிக்கை விடுத்த நிலையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் இன்று அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூடுதல் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டு விழா
X

 கூடுதல் வகுப்பறைக்கு சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சிக்குட்பட்ட சடையப்பபுரம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் தலைமை தாங்கினார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவபதமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டிடப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் காவேரிசீனி துரை, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சாக்ரடீஸ், திமுக ஒன்றிய செயலாளர் சீனித்துரை, அரசு ஒப்பந்தக்காரர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட வேதம் புதூர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.


வேதம் புதூர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்த போது எடுத்த படம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அழகு சுந்தரம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பெருமாள், தென்காசி நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2023 1:38 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி