/* */

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்

HIGHLIGHTS

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்
X

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதன் கிணறு, மகேந்திரவாடி, சாயமலை, களப்பாளங் குளம், கரிசல்குளம், பழங்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் 2018 - 19-ல் வறட்சி காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தது. இதனை அரசு ஆய்வு செய்து நிவாரணம் வழங்கியது.

அதனை தொடர்ந்து 2020-ல் ஏற்ப்பட்ட மழையால் அதே போல் பயிர்கள் பாதிப்படைந்தது. ஆனால் 4 ஆண்டுகளாக பயிர் காப்பீடு திட்டத்தில் மூலம் நிவாரணம் வழங்கபடவில்லை. எனவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி முத்துப்பாண்டி தலைமையில் விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 10 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  3. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  4. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  5. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  6. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  9. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  10. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...