/* */

ஆலங்குளம் அருகே தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தேர்தல் பணிக்கு வந்த தேர்தல் அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு.

HIGHLIGHTS

ஆலங்குளம் அருகே தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தேர்தல் பணிக்கு வந்த தேர்தல் அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து தனியார் கல்லூரியில் நேற்று கீழப்பாவூர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கை உதவி தேர்தல் அலுவலர் பணிக்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் சேகரன் (65) பணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு இன்று காலை வரை நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த பணியாளர்களிடம் கூறியுள்ளார். இது தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் பணியின் போது தேர்தல் அலுவலர் ஒருவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 Oct 2021 10:28 AM GMT

Related News