கொசுவர்த்தியுடன் பெண் கவுன்சிலர்; நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு
சாக்கடைகளை தூர்வாரக் கோரி கொசுவர்த்தியுடன், பெண் கவுன்சிலர் நகரமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS

நகர்மன்ற கூட்டத்தில் கொசுவர்த்தி சுருளுடன் கலந்து கொண்ட பெண் கவுன்சிலர் சுனிதா.
தென்காசி நகராட்சியில், தென்காசி நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண் கவுன்சிலர் கொசுவர்த்தியுடன் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.
தென்காசி நகராட்சி சாதாரண கூட்டம் நகரமன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நகரின் வளர்ச்சிக்காக விவாதிக்கப்பட்டது. போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை. அதனை அதிகரிக்க நகர மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதேபோன்று தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நடுப்பேட்டை பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கிணற்றிற்கு பாதுகாப்பு மூடி நகராட்சி மூலம் அமைக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஏழு மன்ற பொருள்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன இந்த நகராட்சி கூட்டத்தில் 23 வது வார்டில் நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை அப்புறப்படுத்த பலமுறை வலியுறுத்தியும், சாக்கடை அப்புறப்படுத்தப்படாதால் கொசுக்கள் எண்ணிக்கை அதிகமடைந்து வருவதாக கூறி, நகராட்சி தலைவரையும் கண்டித்து அந்தப் பகுதி பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலரான சுனிதா மேஜை மீது கொசுவத்தி ஏற்றி வைத்து, கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கோரிக்கையை நகராட்சியில் முன் வைத்தார் மேலும் குரங்கு தொல்லை, அடிப்படை வசதிகள் என பல்வேறு குறைகள் குறித்தும் நகராட்சி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.