/* */

தென்காசி திமுக மாவட்டச் செயலாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தென்காசி மாவட்ட திமுக செயலாளர் மீது விவசாயி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி  திமுக மாவட்டச் செயலாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
X

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மைதீன்பாத்து. இவருக்கு புதுக்குடி கிராமத்தில் சுமார் மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.

செல்லத்துரை என்பவர் மேற்படி இடத்தை கிரையம் கேட்டு மிரட்டி வருகிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களது விளை நிலம் வழியாக பைப்லைன் அமைப்பதற்கு அனுமதி கேட்டார். நாங்கள் மறுத்துவிட்டோம். இந்நிலையில் அவர் உங்கள் இடத்தை போலி ஆவணம் மூலம் கைபற்றி விடுவேன் என்றும், உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் செல்லதுரையிடம் கேட்டபோது அவர்கள் எனக்கு அரசியலில் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை சார்ந்தவர்கள் தோல்வியை தழுவியதால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கூறும் இடம் பலர் மாறி மாறி விற்பனை செய்து கடந்த 20 வருடத்திற்கு முன்பு எனது தந்தையார் வாங்கியுள்ளார். அவரிடம் உரிய ஆதாரம் இருந்தால் அவரே நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளட்டும்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

திமுக மாவட்ட செயலாளர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில மோசடி தொடர்பாக புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Nov 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!