/* */

தென்காசியில் பாதியில் விடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரி முற்றுகை

தென்காசியில் பாதியில் விடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் பாதியில் விடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரி முற்றுகை
X

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரி செயற்பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தென்காசி நகராட்சி 10 வது வார்டு பகுதியில் போடப்பட்ட சிமிண்ட் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டதை கண்டித்து - கவுன்சிலர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டு பகுதிகளிலும் அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதே போன்று நகராட்சி 10 வது வார்டுக்கு உட்பட்ட மவுண்ட் ரோடு தெருவில் பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்த தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகளவு இஸ்லாமிய மக்கள் வசித்து வரும் மவுண்ட் ரோடு தெருவில் ரமலான் பண்டிகை துவங்கும் முன்பாக சிமெண்ட் தளம் அமைக்கப்பட வேண்டும் என்று 10 வது வார்டு கவுன்சிலர் முகம்மது ராசப்பா நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் மவுண்ட் ரோடு தெருவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி பாதி நடந்த நிலையில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சாலை பணி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கவுன்சிலர் முகம்மது ராசப்பா பல முறை கேட்டும் உரிய பதிலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மவுண்ட் ரோடு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் முகம்மது ராசப்பா தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் சேர்மன், ஆணையாளர், பொறியாளர் என எந்த அதிகாரிகளும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நகராட்சி உதவி பொறியாளர் கண்ணனிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இன்னும் சில தினங்களில் ரமலான் பண்டிகை துவங்க இருப்பதால் அதற்குள் சிமெண்ட் தளப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 21 March 2023 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது