/* */

தென்காசி மாவட்ட நீர்நிலைகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள இச்சூழ்நிலையில் ஜனவரி 28.மற்றும் 29 ஆகிய தினங்களில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட நீர்நிலைகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
X

தென்காசி மாவட்டத்தில் : குளத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, ரெட்டைக்குளம், ராஜகோபாலப்பேரி, கீழப்பாவூா் ஆகிய குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீர் பறவை களின் கணக்கெடுப்பானது, ஜனவரி, 28 மற்றும் 29 -ஆம் தேதிகளிலும் நடத்தப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர் மாதத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு பறவைகள் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள இச்சூழ்நிலையில் 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய தினங்களில் தமிழகம் முழுதும் உள்ள நீர் நிலைகளில் பறவைகள் கண்க்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் நிகழாண்டில் ஜன. 28, 29 ஆகிய இரண்டு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. சுமாா் 200 இயற்கை மற்றும் பறவைஆா்வலா்கள் கலந்து கொண்ட கணக்கெடுப்பிற்கான பயிற்சி திருநெல்வேலி அறிவியல் மையத்தில் ஜன. 27இல் நடைபெற்றது.

தொடா்ந்து தன்னாா்வலா்கள், பறவைகள் ஆராய்ச்சியாளா்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி மாவட்டங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தென்காசி மாவட்டத்தில் இரண்டு குழுவினா் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். இதில் பறவைகள் ஆராய்ச்சியாளா் தளவாய்பாண்டி தலைமையில் 24 போ் தென்காசி மாவட்டம், வாகைக்குளம் மற்றும் கடனாநதி அணையில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

பறவைகள் ஆராய்ச்சியாளா் சரவணன் தலைமையில் 5 போ் கடையம் அய்யம்பிள்ளைக்குளம், இலஞ்சி, இலத்தூா், அச்சன்புதூா், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, ரெட்டைக்குளம், ராஜகோபாலப்பேரி, கீழப்பாவூா் ஆகிய குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

இது குறித்து பறவைகள் ஆராய்ச்சியாளா் சரவணன் கூறியது: நிகழாண்டு தென் மாவட்டங்களில் மழையளவு குறைந்ததால் குளங்களில் நீா் இருப்பு குறைந்து காணப்பட்டது.இதனால் குளங்களில் பறவைகள் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் சுமாா் 42 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் வலசை வரும் பறவைகளான கங்காணி, புள்ளி மூக்குத் தாரா ஆகியவையும் கண்டறியப்பட்டன. மேலும் பல குளங்களில் பராமரிப்பு என்ற பெயரில் அதிக அளவில் மண் அள்ளப்பட்டதாலும், இலஞ்சி, ஆய்க்குடி, அச்சன்புதூா் ஆகிய குளங்களில் நேரடியாக கழிவு நீா் கலப்பதாலும் பறவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா்.

பறவைகள் கணக்கெடுப்பு.... முதன்முதலில் 1998 -இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். மேலும் இதில் உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களும் கூடுதலாக ஆதரவளித்து பங்கேற்றுள்ளன. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்புடன் ஒத்துப்போகும் வகையில் பல தனித்தனி பறவைக் கண்காணிப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு உலகளவில் அறியப்பட்ட பறவை இனங்கள் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு இதன் மூலமே அறியப்பட்டன.

Updated On: 31 Jan 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  2. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  3. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  4. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  5. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  6. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  7. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  10. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்