/* */

பாவூர்சத்திரம் பள்ளி ஆண்டு விழா: பழனிநாடார் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே ஸ்கூல் ஆண்டு விழாவில் பழனிநாடார் எம்.எல்.ஏ,. கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

பாவூர்சத்திரம் பள்ளி ஆண்டு விழா: பழனிநாடார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
X

 வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கும் எம்எல்ஏ.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே ஸ்கூல் ஆண்டு விழாவில் பழனிநாடார் எம்.எல்.ஏ,. கலந்து கொண்டார்.

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஏ.பி.அருள், பால்துரை முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முப்புடாதிதேவி வரவேற்றார். ஆசிரியை பேச்சியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். கௌரவ விருந்தினராக பொன்கணேசன் பங்கேற்றார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் மாணவ , மாணவியர்களுக்கான பல்வேறு நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. காலை சிற்றுண்டி, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. குழந்தை செல்வங்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாது விளையாட்டு துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கல்வி நன்றாக கற்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்குறள், பழமொழிகள், ஆத்திச்சூடி ஆகியனவற்றை மழலை குழந்தைகள் ஒப்புவித்தனர்.

யோகா நிகழ்ச்சிகள் ஆசிரியர் குமார் முன்னிலையில் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சந்தியா, தேவி, பொன்மலர், மகாலட்சுமி, மாரிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Updated On: 28 March 2023 10:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்