/* */

குற்றால அருவியில் குளிக்க தடை

குற்றால அருவியில், வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குற்றால அருவியில் குளிக்க தடை
X

குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அன்மையில், குற்றால அருவியில் ளற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அருவியில் குளித்து கொண்டிருந்த சிலர், வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதன்பிறகு, குற்றாலத்தில் குளிப்பதற்கான வழிமுறைகள் அமைத்து, நீர்வரத்து அதிகம் இருந்தால் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்காமல், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தினர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இன்றி, மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


பிரதான அருவியில், பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை விதித்தனர். அதேபோல், பழைய குற்றாலப் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து படிகளில் ஆறு போல் ஓடுவதால், அங்கும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். ஐந்தருவி பகுதியில் மட்டும் தண்ணீர் மிதமான அளவில் கொட்டுவதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, இதமான காலநிலை நிலவி வருகிறது மேலும் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம் என்று. எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சேர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வந்தனர். சமீபகாலமாக அவர்கள், யார் எப்படி போனால் என்ன என்கிற மனபக்குவத்திற்கு ஆளாகி விட்டனர் காரணம் தொடர் பாதுகாப்பு பணி, தீபாவளி, கோவில் விழாக்களின் பாதுகாப்பு, என அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தனர் குற்றால அருவி பக்கம் கவனம் செலுத்தவில்லை.

நேற்று வரை, போலீசார் இல்லாமல் அருவியில் பாதுகாப்பு பணியில், தீயணைப்பு துறையினர் இருந்தனர். அதன்பிறகு. நேற்று முதல் பாதுகாப்பு பணிக்கு, போலீசார் அமர்த்தபட்டனர் இன்று அதிர்ஷ்டவசமாக போலீசார் பணியில் இருந்த வேளையில், நீர்வரத்து அதிகமானது. உடனடியாக, அருவியில் குளித்து கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றி விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, போலீசாரை அருவிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து வருடம் முழுவதும் குற்றாலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Nov 2022 12:23 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  2. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  3. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  4. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!
  5. தமிழ்நாடு
    தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை, திருச்சி வழியாக ரயில் சேவை அறிவிப்பு
  6. சூலூர்
    பண பலத்தை வைத்து திமுக வெற்றிபெற பார்க்கிறது : அண்ணாமலை புகார்
  7. அரசியல்
    சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனுக்கு கடுமையான...
  8. கல்வி
    நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
  9. தமிழ்நாடு
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி ...
  10. லைஃப்ஸ்டைல்
    பாஸ்தா - உலகின் பிரபல உணவு!