/* */

வாக்கு பெட்டியை காணவில்லை: வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகுளம் ஊராட்சியில் வாக்குபெட்டியை காணவில்லை என வேட்பாளர்கள் ஆட்சியரிடம் புகார்.

HIGHLIGHTS

வாக்கு பெட்டியை காணவில்லை: வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
X

வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகுளம் ஊராட்சியில் வாக்குபெட்டியை காணவில்லை என வேட்பாளர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது முள்ளிகுளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 6 வார்டுகள் உள்ளது. இங்கு 2095 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆறுமுககுமார், கந்தசாமி, பாலசுப்பிரமணியன், உமா மகேஸ்வரி, மதியழகன், முருகன் ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 3 பூத்துகளில் 5 பெட்டிகளில் 1490 வாக்குகள் கடந்த 6 ம் தேதி பதிவாகி உள்ளது.

இவர்களுக்கான வாக்கு எண்ணும் மையம் புளியங்குடி விசாகா கல்லூரியில் வைத்து நேற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. முள்ளிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முருகன் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற 5 வேட்பாளர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், எங்கள் பூத்துகளில் பதிவான வாக்குப் பெட்டிகளை காணவில்லை என்றும், தங்கள் பகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 Oct 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா