/* */

பாவூர்ச்சத்திரம் பேருந்து நிலையத்தில் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு

பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் சைபர் கிரைம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பாவூர்ச்சத்திரம் பேருந்து நிலையத்தில் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு
X

பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாவூர்ச்சத்திரம் பேருந்து நிலையத்தில் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

தென்காசி மாவட்டம், தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்ப இணையவழி குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினரால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினர் Whatsapp ல் வரும் தேவையில்லாத Link ஐ தொடாதீர்கள், வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பரிசு வந்திருப்பதாகவும் அதைப் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் மோசடி நடைபெறுகிறது. பேங்கில் இருந்து பேசுகிறோம் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP ஐ கூறுங்கள் என OTP ஐ பெற்றுக்கொண்டு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகலாம், தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதால் உங்கள் தொலைபேசி ஹேக்கிங் செய்யப்படும்.

இதுபோன்ற பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாகவும் யாரும் நம்பி எந்த ஒரு தகவலையும் பணத்தையும் அளித்து ஏமாந்து விடாதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் மற்றும் இணைய முகவரி அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 30 Nov 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி