/* */

தென்காசியில் வாகன ஏலம்...! கேக்றவங்க கேக்கலாம்!

தென்காசி மாவட்டத்தில் உரிமைக் கோரப்படாத நிலையில் இருக்கும் 358 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.

HIGHLIGHTS

தென்காசியில் வாகன ஏலம்...! கேக்றவங்க கேக்கலாம்!
X

பட விளக்கம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கோப்பு படம்.

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்துவரும் 358 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் பல வாகனங்கள் இருந்து வருகின்றன. இவற்றை கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு உரிமையானது எனக் கூறி யாரும் வந்து உரிமை கோரவில்லை. இதனை பாதுகாக்கும் பொறுப்பும் காவல்துறைக்கு இருந்து வருகிறது. வழக்கமாக வெகு நாட்களாக இந்த மாதிரியான வாகனங்களை யாரும் உரிமை கோராமல் இருந்தால் அதனை பொதுமக்களுக்கு ஏலம் மூலம் வழங்குவது நடைமுறை.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 354 இருசக்கர மோட்டார் வாகனங்கள், ஒரு மூன்று சக்கர மோட்டார் வாகனம், மூன்று நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் என மொத்தம் 358 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அறிவிப்பின்படி, இந்த ஏலம் வரும் 01.04.2023, மற்றும் 02.04.2023 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து இந்த ஏலம் நடைபெற இருக்கிறது. இதில் தென்காசி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைப்பார்கள் என்றும், பின்னர் பொதுமக்களுக்கான ஏலம் துவங்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 27.03.2023 ஆம் தேதி முதல் 30.03.2023 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் காலை 10.00 முதல் மாலை வரை நேரில் பார்வையிடலாம்.

வாங்க விரும்புபவர்களுக்கு சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின்படி, வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் ௩௦௦௦ முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி பணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் GST தொகையினையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்லலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 March 2023 6:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்