குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி; மக்கள் உற்சாகம்
Courtallam Falls -குற்றால அருவிகளில், நீர்வரத்து சீரானதை அடுத்து, குளிக்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது. இதையடுத்து, அங்கு வந்த மக்கள், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
HIGHLIGHTS

குற்றால அருவி
Courtallam Falls -தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது. இந்நிலையில்தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ததால், குற்றால அருவிகளில் திடீரென நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த போலீசார், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதித்தனர். சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்ட போலீசார் தடை விதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரில் வேகம் மற்றும் அளவு குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை குளிக்க போலீசார் அனுமதித்தனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கற்கள் மற்றும் மரக்கட்டைகளை சுகாதார பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஐந்தருவி சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும், தண்ணீர் சீராக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குழுமையான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில், அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-10-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 61.10 அடி
நீர் வரத்து : 16 கன அடி
வெளியேற்றம் : 50 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 66 அடி
நீர்வரத்து : 13.10 கன அடி
வெளியேற்றம் : 30 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 58.56 அடி
நீர் வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 34.62 அடி
நீர் வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 3 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 106.25 அடி
நீர் வரத்து : 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 60 கன அடி
மழை அளவு:
கடனா : 4 மி.மீ
கருப்பா நதி :22.5 மி.மீ
குண்டாறு :7.4 மி.மீ
அடவிநயினார்:25 மி.மீ
ஆய்குடி :40 மி.மீ
தென்காசி:22 மி.மீ
செங்கோட்டை:11.8 மி.மீ
சிவகிரி :13 மி.மீ.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2