தென்காசி நகராட்சி கூட்டத்தில் அதிமுக - பாஜக நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா

தென்காசி நகராட்சி கூட்டத்தில் அதிமுக - பாஜக நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி நகராட்சி கூட்டத்தில் அதிமுக - பாஜக நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா
X

தர்ணாவில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர்கள்.

தென்காசி நகராட்சி சாதாரன கூட்டம் நகர்மன்றத் தலைவர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரபிக் அன்சாரி தனது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்த நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் உங்கள் வார்டு பகுதியில் செய்தி தரப்படவில்லை என்றும், பணிகள் ஒதுக்குவதில் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் ராசப்பா மவுண்ட் ரோடு அல்லது கொடிமரம் பகுதியில் இ சேவை மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அனைத்து உறுப்பிணர்களுக்கும் தேவையான பணிகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் சாதிர் தெரிவித்தார் அதனை தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 1 July 2022 5:39 AM GMT

Related News