/* */

அடவி நயினார் கோவில் மற்றும் குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது

அடவி நயினார் கோவில் நீர்த் தேக்கம், குண்டாறு நீர்த் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

HIGHLIGHTS

அடவி நயினார் கோவில் மற்றும் குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது
X

தென்காசி மாவட்ட அணைகளில் நீர் வெளியேறும் காட்சி

தென்காசி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேக்கரையில் 132.5 கன அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சுமார் 7500 ஏக்கர் பரப்பளவு பாசனம் பெறும் இந்த அணைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அதேபோல் செங்கோட்டை அருகே 32 கன அடி அளவு கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், நகர்ப்புறங்களிலும் மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.

Updated On: 16 Oct 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?