/* */

இரட்டைகுளம் கூட்டுறவு சங்க தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மாைனம்

தென்காசி அருகே திமுக -வை சேர்ந்த இரட்டைகுளம் கூட்டுறவு சங்க தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மாைனம் கொண்டு வரப்பட்டது.

HIGHLIGHTS

இரட்டைகுளம் கூட்டுறவு சங்க தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மாைனம்
X

7 உறுப்பினர்கள் பங்கேற்று வாக்களித்தனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள 0.1697 இரட்டை குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக தி.முக -வை சேர்ந்த காசி, துணைத் தலைவராக துரைக் கண்ணு மற்றும் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2 நிர்வாகக் குழு உறுப்பினர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த தலைவரான காசி என்பவர் மீது திமுக நிர்வாகிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கடந்த மே மாதம் 30ம் தேதி கொண்டு வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி ஜான் கேபிரியல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒத்தி வைத்து விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தலைவர் காசி, உறுப்பினர் பாலமுருகன் இருவரைத் தவிர மற்ற துணைத் தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்கள் கலந்து கொண்டு தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். இனி 7 உறுப்பினர்கள் கூடி அடுத்த தலைவரை தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இரட்டை குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தன்ராஜ் தலைமையில் காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Updated On: 24 Jun 2022 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு