/* */

இந்தியாவை மாற்ற நினைக்கிறார் மோடி-ராகுல்காந்தி

இந்தியாவை மாற்ற நினைக்கிறார் மோடி-ராகுல்காந்தி
X

பிரதமர் மோடி ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ஒரு வரலாறு என இந்தியாவை மாற்ற நினைக்கிறார் என தென்காசியில் ராகுல்காந்தி பேசினார்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்கள் முன்னிலையில் தேர்தல் பரப்புரை ஆற்றினார்.இந்தியாவில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என மோடி பேசி வருகிறார். தமிழக வரலாறு இந்திய வரலாறு இல்லையா, தமிழ்மொழி இந்திய மொழி இல்லையா, தமிழர்களின் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் இல்லையா? பிரதமர் மோடி ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ஒரு வரலாறு என இந்தியாவை மாற்ற நினைக்கிறார்.தமிழக முதல்வர் ஊழலின் உருவமாக இருக்கிறார். அதனால் தான் பிரதமர் மோடியிடம் தலை குனிந்து நிற்கிறார்.

தமிழ்நாட்டை மோடி, அதிமுக ஆட்சி மூலம் கண்ட்ரோல் செய்கிறார்.சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி வரி மிகப்பெரிய சாபமாக இருக்கிறது.பணமதிப்பிழப்பு விவகாரம் சிறு குறு தொழில்கள் செய்யும் வியாபாரிகளை மிகவும் பாதித்துள்ளது.கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இவையெல்லாம் மக்களின் சேமிப்பு லாபத்தை பணக்காரர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக உள்ளது எனவும் பேசினார்.

Updated On: 2 March 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்