கொரோனா நிவாரணத்துக்கு தங்கச்சங்கிலி வழங்கிய சங்கரன்கோவில் எம்எல்ஏ மகள்

முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு,ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி, ரூ.4300 வழங்கினார் சங்கரன்கோவில் எம்எல்.எ மகள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா நிவாரணத்துக்கு தங்கச்சங்கிலி வழங்கிய சங்கரன்கோவில் எம்எல்ஏ மகள்
X

முதல்வரின் கொரோனா பொது நிவாரணத்துக்கு தனது தங்க சங்கிலி மற்றும் ரொக்கப்பணத்தை சங்கரன்கோவில் எம்எல்ஏ மகள் வழங்கயி காட்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் ராஜா. இவரது மகள் இஷானிகாவின் 8-பிறந்த நாள் விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. அப்போது இஷானிகாவிற்கு சட்டமன்ற உறுப்பினரின் தந்தை ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் உறவினர்கள் சேர்ந்து ரொக்கப் பணமாக ரூ 4,300 இஷானிகாவிடம் வழங்கியுள்ளனர்.

ஆடம்பரத்தை விரும்பாத இஷானிகா, இந்த பரிசு பொருட்களை என்ன செய்வது என்று பெற்றோரிடம் ஆலோசித்துள்ளார். பெற்றோர்களும் உனக்கான பரிசு பொருளை உனது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தை இஷானிகா தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தை உணர்ந்து, ஏழை எளிய கொரோனா நோயாளிகளுக்கு பயன்பட வேண்டும் என்று கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜா தனது குழந்தை இஷானிகா -வை அழைத்துக்கொண்டு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதனை சந்தித்து தனது குழந்தை பிறந்த நாள் பரிசு பொருட்களை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அனுப்பி வைக்க கேட்டு கொண்டார்.

அதன்படி குழந்தை இஷானிகா தனக்கு வந்த பிறந்த நாள் பரிசு பொருளான ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி ரொக்கப் பணம் ரூ.4300 ஆகியவற்றை தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் வழங்கினார். தற்போதுள்ள இக்கட்டான கொரோனா காலகட்டத்தை உணர்ந்து செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் குழந்தை இஷானிகாவின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சியின்போது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தென்காசி நகர செயலாளர் சாதிர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2021 4:48 AM GMT

Related News