Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் நினைவு நாளையொட்டி வாரிசுதாரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பூலித்தேவரை ஆங்கிலேயர் கைது செய்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்றபோது சங்கரநாராயணர் கோமதி கோவிலில் மறைந்து ஜோதியானதாக கூறப்படுகிறது
HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவரின் ஜோதியான நாளை முன்னிட்டு அவரது வாரிசுதாரர்கள் சிறப்பு பூஜைகள் செய்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரை, ஆங்கிலேயர் கைது செய்து திருநெல்வேலிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள சங்கரநாராயணர் கோமதி அம்பாளை, வணங்கி விட்டு வருவதாக திருக்கோவிலினுள் சென்ற பூலித்தேவர் உள்ளேயே மறைந்து ஜோதியானதாக கூறப்படுகிறது.
திருக்கோவிலினுள்ளே மறைந்த நாளான இன்று பூலித்தேவர் அறைக்கு சென்ற அவரது வாரிசுதாரர்கள் திருவுருவப்படத்துக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை செய்து வழிபாடு செய்த பின்னர் மலர்கள் தூவி மரியாதை செலுதினர்..