/* */

புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்

புளியங்குடி சிந்தாமணி பகுதியில், பொதுமக்கள் தங்களுடைய சொந்த செலவில் வைத்த சிசிடிவி கேமராக்களை அகற்ற உத்தரவிட்டார் நகராட்சி ஆணையர். இதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்
X

புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் 

புளியங்குடி பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை அப்புறப்படுத்த உத்தரவிட்ட நகராட்சி ஆணையர், மற்றும் திமுக பிரமுகரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் அருகே உள்ள சிந்தாமணி 6 வது வார்டு தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும், அத்தெருவின் முகப்பு மற்றும் குடிநீர்தொட்டி என ஆறு இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவை அப்பகுதி மக்களின் சொந்த பணத்தில் பொருத்தியுள்ளனர்.

இதனை அப்பகுதியில் உள்ள திமுக பிரமுகர் தூண்டுதலின் பெயரில் ஒருவர் சிசிடிவி கேமராக்களை சில நாட்களுக்கு முன்பு அடித்து நொறுக்கியதாக கூறுகின்றனர். அதையும் அப்பகுதியில் உள்ள மக்கள் பொருட்படுத்தாமல் மீண்டும் புதிய சிசிடிவி கேமிராவை பொறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புளியங்குடி நகராட்சி ஆணையர் குமார்சிங் அத்தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கண்காணிப்புக் கேமிராக்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று புளியங்குடி நகராட்சி ஆணையருக்கு எதிராகவும், மேலும் சிசிடிவி கேமிராவை அடித்துநொறுக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நகராட்சி ஆணையரையும், திமுக பிரமுகரையும் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 7 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?