Begin typing your search above and press return to search.
தண்ணீர் தாெட்டி குழாயில் பறந்த தேசிய கொடி: ஊராட்சி செயலாளருக்கு கண்டனம்
நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி குழாயில் தேசியக்கொடியை ஊராட்சி செயலாளர் ஏற்றியுள்ளார்
HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே நீர்த்தேக்கத் தொட்டியின் குழாயில் ஏற்றப்பட்ட தேசிய கொடி.
சங்கரன்கோவில் அருகே நீர்த்தேக்கத் தொட்டியின் குழாயில் தேசிய கொடி ஏற்றி அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
இந்திய திருநாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீர் குழாயில் தேசியக்கொடியை ஊராட்சி செயலாளர் ஏற்றியுள்ளார்.
இதனையடுத்து தேசியக் கொடியை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் அசுத்தமாக உள்ளது. அதனை சுத்தப்படுத்தாமல் தேசியக் கொடியை ஏற்றி அவமதிப்பு செய்த நெல்கட்டும்செவல் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.