/* */

சங்கரன்கோவிலில் டூவீலர் மீது மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

Today Accident News in Tamil - சங்கரன்கோவிலில் டூவீலர் மீது மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் டூவீலர் மீது மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News in Tamil-தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன் மற்றும் ஆகாஷ். இவர்கள் இருவரும் செங்கோட்டை சென்றுவிட்டு சொந்த ஊரான இராமநாதபுரம் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது சங்கரன்கோவில் புளியங்குடி மாநில நெடுஞ்சாலையில் வடக்குபுதூரை அடுத்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மற்றும் மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!