/* */

இந்து சமய அறநிலைய துறையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்: திருமாவளவன்

HRCE Department -இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்றும் பிரிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை

HIGHLIGHTS

HRCE Department | Tenkasi News
X

பைல் படம் 

HRCE Department -இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமயத்துறை என்றும் வைணவ சமய துறை என்றும் இரண்டாக பிரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாஞ்சாகுளம், குறிஞ்சாகுளம் ஆகிய கிராமங்களில் நடந்த தீண்டாமை சம்பவங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு ரத வீதியில் நடைபெற்றது. அப்போது தீண்டாமை சம்பவங்களைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.இதில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவருக்கு கூறியதாவது

பாஞ்சாகுளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.அதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இந்தியாவிலேயே அதிகமாக சாதிய வன்கொடுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது இது காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். பதிவாகாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு.முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் எடுத்துச் சொல்வோம்.

அகில இந்தியாவில் ஆர் எஸ் எஸ் க்கு எதிரான அரசியல் இப்போது தலை தூக்கி இருக்கிறது தமிழகத்தில் அது வலுவாக இருக்கிறது.ஆனால் தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார்.கிறிஸ்தவர்களை திட்டமிட்டு திருக்குறளை தவறாக மொழி பெயர்த்து விட்டார் என சொல்லுவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.

இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமயத்துறை என்றும் வைணவ சமய துறை என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவை தனித்தனியே இயங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். சைவ சமயத்தை மேம்படுத்துவதற்கு அதன் சொத்துக்களை பாதுகாப்பதற்கு அந்த சொத்துக்களை பராமரிப்பதற்கு ஒரு தனி அறநிலையத்துறை தேவைப்படுகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை சமயத்தின் மீது நம்பிக்கை இல்லை, நம்பிக்கையுடைய மக்களுக்காக சொல்கிறேன்.

மதுரை ஆதீனம் காலமாகிவிட்டார். அடுத்து ஒருவர் பொறுப்பேற்று இருக்கிறார், அதைப்போல ஒவ்வொருவரும் காலமாகும் போது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ள முடிகிறது, சைவர்களின் அடையாளத்தை அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். சைவ சமய அறநிலையத்துறை தனி நிர்வாகம் செய்யப்பட வேண்டும், வைணவ சமய அறநிலையத்துறை தனித்து இயங்க வேண்டும்.என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.என்று கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Oct 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?